×

சென்னை மாநகராட்சியில் இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் அறிவிப்பு..!!

சென்னை: சென்னை மாநகராட்சியில் இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையோர போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடங்கள் கடந்த சில மாதங்களாகவே அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை மாநகரில் இருக்கக்கூடிய 200 வார்டுகளிலும் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை வாகனங்களை நிறுத்த மொத்தம் 50 பார்க்கிங் இடங்கள் உள்ள நிலையில், மாநகராட்சிக்கு மாதந்தோறும் இதன் மூலம் 65 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெறுகிறது.

பார்க்கிங் இடங்களில் கார்களுக்கு ஒருமணி நேரத்திற்கு 20 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தியாகராய நகரில் உள்ள தணிக்காச்சலம் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில், இரு சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும் , 4 சக்கர வாகனங்களுக்கு 60 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இருசக்கர வாகனங்களுக்கு மணிக்கு 5 ரூபாயும், 4 சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும் பார்க்கிங் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை மாநகராட்சியில் இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சியில் இணைய வழியில்...